பள்ளிக்கூடம்
ஆலம்பள்ளம் கிராமத்தில் தமிழக அரசு கல்வித் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அரசினர் மழலையர் கூடமும், அரசினர் நடுநிலைப் பள்ளியும் இயங்கி வருகிறது. இதன் மூலம் ஆலம்பள்ளம் மற்றும் முசிறியை சேர்ந்த இரு கிராம மாணவர்கள் பயன் அடைந்து வருகிறார்கள்.
மழலையர் கூடம்
மழலையர்களின் அறிவுத் திறன் மற்றும் ஞாபக வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இந்த அரசினர் ஆரம்பக் கல்வி நிலையம் இயங்கி வருகிறது. இதன் மூலம் மொத்தம் 15 மழலைச் சிறார்கள் பயன் அடைந்து வருகிறார்கள். இதில் மொத்தம் 4 ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர். சிறார்களின் ஆரோக்கியத்திற்காக அரசினால் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. இது கிராம நிர்வாகத்தின் கீழ் கண்காணிக்கப் பட்டு வருகிறது.
அரசினர் நடுநிலைப் பள்ளி, ஆலம்பள்ளம்
1972 ஆம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆக உருவாக்கப்பட்ட இப்பள்ளி பின்னர் அரசினர் நடு நிலைப் பள்ளி ஆக தரம் உயர்த்தப்பட்டது. இதில் ஆலம்பள்ளம் மற்றும் முசிரியைச் சேர்ந்த மாணவ மணிகள் பயின்று வருகின்றனர். இடவசதி மற்றும் மாணவர்களின் நலன் கருதி 1999 ம் ஆண்டு புதிய பொலிவுடன் இப்போதுள்ள இடத்திற்கு மாற்றப்பட்டது.
இதில் மொத்தம் 75 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 8 ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர். மாணவர்களின் வளர்ச்சிக்காக கணினி மற்றும் நூலகம் அரசினால் அமைத்துத் தரப்பட்டு உள்ளது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகறிவியல், கைத்தொழில் மற்றும் கணிப்பொறி போன்ற பாடங்கள் தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ் தமிழ் மொழியில் பயிற்றுவிக்கப் படுகிறது.
இப்பள்ளியில் தமிழக அரசின் திட்டமான மதிய உணவு, 10 கட்டணத்தில் பாட நூல்கள் மற்றும் சீருடைகள் ஆகியன முறையே வழங்கப்பட்டு வருகிறது. . மேலும் மாணவர்களுக்கு விளையாட்டு மற்றும் உடற்பயிற்ச்சி கூடம் அமைத்துத் தரப்பட்டு உள்ளது.
நூலகம்
மாணவர்களின் பயனடையும் விதத்தில் ஆலம்பள்ள நடுநிலைப் பள்ளியில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்களின் பாடம் சார்ந்த நூட்களும், கதைகள், கட்டுரைகள் அடங்கிய நூட்களும் வைக்கப்பட்டுள்ளது. இது மாணவர்கள் மட்டுமல்லாது கிராம மக்கள் பயன்பாட்டிற்கும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் நூலகத்தில் கணினி வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இணையதள தகல்வல்கள் அறிந்து கொள்ளவும், தகவல்கள் பதிவிரக்கம் செய்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.