கிராமத்தைப் பற்றி

Home  /  கிராமத்தைப் பற்றி

இருப்பிடம்

ஆலம்பள்ளம் கிராமம், தஞ்சை மாவட்டத்தின் ஒரு வட்டாட்சியான பட்டுக்கோட்டையின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் ஒரு எழில்மிகு கிராமம் ஆகும்.

இக்கிராமத்தின் மொத்தப் பரப்பளவு 955.37 ஏக்கர். இதில் 16 விழுக்காடு(16%) நீர் நிலைகளையும், 54 விழுக்காடு(54%) விளை நிலங்களையும், 30 விழுக்காடு(30%) வீட்டுமனை மற்றும் சாலைகளையும் கொண்டுள்ளது.

இந்த எழில்மிகு கிராமம் பட்டுக்கோட்டையிலிருந்து 12 கி.மீ தொலைவில் மதுக்கூர் மற்றும் ஆலத்தூர் கிராமத்திற்கு இடையே அமைந்துள்ளது.

வரலாறு

ஆலம்பள்ளம் கிராமத்தின் வரலாற்று தளத்தில் உங்களை காண்பதில் மிக்க மகிழ்ச்சி. இங்கு கிராமத்தில் வரலாற்று செய்திகாளாக உள்ள அனைவற்றும் சேகரிக்கப்படும். தகவல்கள் ஏதேனும் விடுபட்டிருப்பின் குழுவிற்கு தெரியபடுத்தவும். நன்றி.

தொழில்

ஆலம்பள்ளம் கிராம மக்களின் முக்கியத் தொழிலாகக் கருதப்படுவது விவசாயம். இரண்டில் ஒரு பகுதி மக்களின் வசிப்பிடத்திற்க்கும், மற்றொரு பகுதி விவசாயத்திற்கும் பயன்படுத்தப் படுகிறது. மண்ணில் விளைவிக்கப் படும் முக்கிய விளைச்சல்கள் நெல், உளுந்து, நிலக்கடலை, சோளம், கரும்பு, எள் மற்றும் சில பயறு வகைகள் ஆகும். மேலும் விவசாயத்தின் ஒரு பகுதியாக தென்னை மற்றும் வாழையும் இம்மண்ணில் விழைக்கப்படுகிறது.

நிலத்தடி நீர், ஆறு, குளம் ஆகியவை விவசாயத்திற்கு முக்கிய நீர் பாசனமாக பயன்படுத்தப் படுகிறது. விளைச்சலுக்கு பெரும்பாலும் இயற்க்கை உரமே பயன்படுத்தப் படுகிறது. மாடு மற்றும் உழவு எந்திரங்கள் ஏர் செய்வதற்கு பயன்படுத்தப் படுகிறது. கிராம மக்கள் விவசாய அலுவலரின் ஆலோசனை கேட்டறிந்து விவசாயம் செய்கிறார்கள். தமிழகத்தின்தென்னை ஆராய்ச்சி நிலையம், வேப்பங்குளம் (Coconut Research Station, Veppankulam) ஆலம்பள்ளத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

இம்மண்ணிலிருந்து விளைக்கப் படுபவை அனைத்தும் ஆலத்தூர், மதுக்கூர் மற்றும் பட்டுக்கோட்டையில் கொள்முதல் செய்யப் படுகிறது.

மேலும் கொயவு, சலவை, தச்சு போன்ற தொழில் புரியும் மக்களும் இம்மண்ணில் வசிக்கின்றனர். ஆலம்பள்ளம் சுற்றி உள்ள பகுதிகளில், கொயவுத் தொழில் இங்கு மட்டுமே கடைபிடிக்கப் படுவது கிராமத்தின் தனிச் சிறப்பாகும். இதர பால் உற்பத்தியிலும் கிராம மக்கள் ஈடுபடுகின்றனர்.

படித்த பட்டதாரி ஆசிரியர்கள், சுயதொழில் புரியும் பொறியாளர்கள் மற்றும் மருத்துவர்கள், அரசாங்கம் மற்றும் தனியார் துறைகளில் பணி புரியும் பொறியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அலுவலர்களும், இங்கு வசிக்கின்றனர். மேலும் ஒரு பகுதி மக்கள் மேல் நாடுகளில் தனியார் துறைகளில் கட்டுமான தொழில் மற்றும் சுயதொழில் புரிந்தும் வருகின்றனர்.